பொது செய்தி

தமிழ்நாடு

'மாஸ்க்' அணியாமல் வந்தால் 'டெஸ்ட்': நகரப்பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், 'மாஸ்க்' அணியாமல் வருபவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை, 54 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், கடந்த, 1ம் தேதி முதல் பல தளர்வுகளை அரசு அறிவித்தது. இதையடுத்து, பொள்ளாச்சியில், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை வழக்கம் போல செயல்பட துவங்கியுள்ளன. முகக்கவசம் அணியாதவர்களுக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.இந்நிலையில், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யும் திட்டம், நகரப்பகுதியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி வடக்கிபாளையம் பிரிவு, கோட்டூர் ரோடு, பல்லடம் ரோடு - மகாலிங்கபுரம் சந்திப்பு பகுதியில், முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, போலீசார் உதவியுடன், சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பொள்ளாச்சி நகரப்பகுதிகளில், 54 பேருக்கு இதுபோன்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில், ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், முகக்கவசம் அணியும் பழக்கம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அனைவரும் முகக்கவசம் அணிந்தால், 10 நாட்களில் தொற்று பரவல் எண்ணிக்கை குறைந்துவிடும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.பாதுகாப்பும் அவசியம்!சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பொள்ளாச்சியில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதால், விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், பரிசோதனை செய்யும் இடத்தில் ஒருவருக்கு பரிசோதனை செய்த பின், கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.அதன்பின், அடுத்தவருக்கு மாதிரி எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்ற வேண்டும். மேலும், திறந்தவெளியில் பரிசோதனை செய்வதால், பாதுகாப்பில்லாத நிலையே நிலவுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X