பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் தக்காளி பாதிப்பு: மார்க்கெட்டில் விலை சரிவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டிற்கு, மழையால் பாதிக்கப்பட்ட தக்காளி வரத்தால், 12 கிலோ பெட்டி ஒன்றுக்கு, 70 ரூபாய் விலை சரிந்தது.கிணத்துக்கடவு பகுதியில், சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள் கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. தக்காளிகளை, விவசாயிகள் பறித்து எடுத்து, 12 கிலோ பிடிக்கக்கூடிய பெட்டியில் அடுக்கி தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர்.மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைவாக இருந்தது. நேற்று, தக்காளி ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்படவில்லை. இதனால், 12 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டி ஒன்றுக்கு, 530 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தில், பெட்டி ஒன்று அதிகபட்சமாக, 600 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை காட்டிலும், பெட்டி ஒன்றுக்கு, 70 ரூபாய் விலை சரிந்தது.விவசாயிகள் கூறுகையில், 'மழை பெய்வதால், செடிகளில் வளர்ந்துள்ள தக்காளிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சரியாக பழுக்காமல் பழுப்பு நிறமாக மாறியதால், தக்காளியை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயங்கினர். இதனால், விலை சரிந்துள்ளது. கட்டுப்படியான விலைக்கு ஏலம் சென்றதால், நிம்மதி அடைந்தோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X