சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளியூர் பஸ்சில் கட்டண குழப்பம் :கண்டக்டர் - பயணிகள் வாக்குவாதம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இருந்து இயங்கும் வெளியூர் பஸ்களில் ஏறி, அருகில் உள்ள ஸ்டாப்களில் இறங்கும் பயணிகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாக்குவாதம் ஏற்படுகிறது.பொள்ளாச்சி போக்குவரத்து கழகத்தின் கீழ் இயங்கும் டவுன் பஸ்களில், பயணிகள் கூட்டம் மிக்குறைவாக இருப்பதால், குறைந்த எண்ணிக்கையிலான டவுன் பஸ்களே இயக்கப்படுகின்றன. அதுவும், தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.இதனால், பொதுமக்கள் பஸ் வசதி இன்றி அவதிப்படுகின்றனர். இதற்கு தீர்வாக, பொள்ளாச்சியில் இருந்து கோவை, உடுமலை, பல்லடம் வழித்தடங்களில் இயங்கும் வெளியூர் பஸ்களில், உள்ளூர் பயணிகளை ஏற்றி சென்று, இறக்கி விட போக்குவரத்து கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.குறைந்த துாரம் உள்ள இடத்துக்கு, வெளியூர் பஸ்களில் செல்லும் போது, அந்த பஸ்சுக்கு உரிய கட்டணத்தை கண்டக்டர்கள் வசூலிக்கின்றனர். ஆனால், பயணிகள் டவுன் பஸ் கட்டணம் தான் வசூலிக்க வேண்டும், என கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் - பொதுமக்களிடையே தகராறு ஏற்படுகிறது.போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்கள் வசதிக்காக தான், வெளியூர் பஸ் அருகில் உள்ள ஸ்டாப்களில் நிறுத்தப்படுகின்றன. ஆனால், அந்த பஸ்சுக்குரிய கட்டணத்தை கொடுத்து தான் பயணிக்க வேண்டும். டவுன் பஸ் கட்டணத்தில் வெளியூர் பஸ்களில் பயணிக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X