சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எட்டு பேருக்கு தொற்று உறுதி

Added : செப் 14, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலையில், எட்டு பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது; தொற்று காரணமாக ஒருவர் இறந்தார்.பொள்ளாச்சி கல்யாணி மில் ரோட்டில், 82வயது முதியவர், 48 வயதான பெண்; இந்திரா நகரை சேர்ந்த, 50 வயது ஆண் மற்றும் சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த, 52 வயது ஆண் தொற்று பாதிப்புக்கு உள்ளாகினர். சமத்துாரில், 55 வயது பெண், ஆனைமலையை சேர்ந்த, 27 வயது ஆண், திப்பம்பட்டியை சேர்ந்த, 55 வயது பெண், 31 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.தொற்று பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்பு பகுதியில் கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், தேவம்பாடியை சேர்ந்த, 36 வயது பெண், தொற்று பாதிப்பு காரணமாக கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு, அவர் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X