தமிழ்நாடு

குளோன் விரைவு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வருமா

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
குளோன் விரைவு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வருமா

மதுரை : ரயிலில் சீட் கிடைக்காமல் தவிக்கும் பயணிகளுக்காக வட மாநிலங்களை போன்று தெற்கு ரயில்வேயிலும் குளோன் விரைவு ரயில்களை இயக்க நிர்வாகம் முன் வர வேண்டும்.

மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8:30 மணிக்கு பாண்டியன் விரைவு ரயில் புறப்படுகிறது. இந்த ரயிலுக்கு முன்பதிவு செய்து 'சீட்' கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருந்தால் பாண்டியன் போன்ற அதே தரம், பெட்டிகள், வேகத்துடன் அடுத்த அரை மணிநேரத்தில் புறப்படும்படியான ரயில்கள் குளோன் ரயில்கள் எனப்படுகின்றன.

காத்திருப்போர் பட்டியலை கணக்கில் கொண்டு பயணிகளுக்கு இடம் இல்லை என்ற நிலையை தவிர்க்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குளோன் ரயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளது.இதனால் காத்திருப்போர் பட்டியல் பயணிகளும் பயன்பெறுவர். மற்ற ரயில்வே மண்டலங்களில் குளோனி விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. பயணிகள் நெரிசல் மிகுந்த மதுரை வழித்தடத்தில் குளோன் ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இதற்கு எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுக்க வேண்டும்.

தெற்கு ரயில்வே பயணிகள் நலச்சங்க பொது செயலாளர் பத்மநாபன் கூறியதாவது: தென்மேற்கு ரயில்வேயில் 15 குளோன் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை - மதுரை, மதுரை - திருச்சி-பெங்களூரு, ராமேஸ்வரம் - ஐ தராபாத், நாகர்கோவில்- கோவை வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு குளோன் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முன்வர வேண்டும். நிர்வாகத்திற்கு வருவாய் கிடைப்பதுடன், பயணிகளின் தேவையும் நிறைவேறும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naju -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-202022:24:17 IST Report Abuse
naju ஒருத்தவன் நம்ம ஆசைய தூண்டுரான்னா ஏமாற்றப் போறான்னு அர்த்தம்,இந்தியால மக்கள் புலம் பெயர்ந்து குறைந்த செலவில் பயணிச்சிக்கிட்டு இருக்கிற துறையையும் விட மாட்டீங்களே
Rate this:
Cancel
mupaco - Madurai,இந்தியா
14-செப்-202013:33:19 IST Report Abuse
mupaco காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர் மட்டும் பயணிக்கும்படி நாகர்கோவில் முதல் சென்னை வரை இரு வழி பாதை உள்ளதால் உரிய பயண நேரத்தில் செல்லும் படி கணினி துணை கொண்டு ஒதுக்கீடு செய்து, முழுவதும் படுக்கை வசதி கொண்ட ரயில் இயக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X