பொது செய்தி

தமிழ்நாடு

சூழல் காக்க பசுமையாகும் கோழிப்பண்ணை வளாகம்: 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில் மரக்கன்று நடவு

Added : செப் 14, 2020
Share
Advertisement

உடுமலை:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், கோழிப்பண்ணையில், இயற்கை சூழல் உருவாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.திருப்பூர் மாவட்டத்தின் பசுமைப்பரப்பை அதிகரிக்கும் வகையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட இலக்குடன், கடந்த 5 ஆண்டுகளில், 8 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.நடப்பாண்டு, பருவ மழை காலத்திற்குள், 2 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விவசாயம் மேற்கொள்ள முடியாமல், உயிர் வேலி, கம்பி வேலி மற்றும் தண்ணீர் வசதியுடன் கூடிய விவசாய நிலங்களில், இத்திட்டத்தின் கீழ், மரச்சாகுபடி திட்டமாக விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் நடவு செய்து தரப்படுகிறது.இந்நிலையில், கறிக்கோழி மற்றும் தாய்க்கோழி பண்ணைகளில், வெப்பத்தை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் காக்கும் வகையிலும், பண்ணை வளாகத்தை சுற்றிலும், குளிர் சீதோஷ்ண நிலையுடன், பசுமையாகவும் இருக்கும் வகையில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.உடுமலை பணத்தம்பட்டி, ரிது வர்ஷினி பார்ம் வளாகத்தில், மலைவேம்பு, தேக்கு,கடம்பை என, 1,050 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்சியில், நில உரிமையாளர்கள் செந்தில்குமார், கவிதா, கிழக்கு லயன்ஸ் சங்கம், மழை உடுமலை மற்றும் வனத்துக்குள் திருப்பூர் திட்ட குழுவினர் பங்கேற்றனர்.தற்போதைய சூழலில், மரங்களின் தேவை அதிகரித்துள்ளது. இவற்றால், உருவாக்கப்படும் பொருட்கள், பிளைவுட், கட்டுமானம் என மரங்களின் தேவை அதிகரிக்கிறது. வனம் சுருங்காமல், பசுமை வளர்ப்பு, வருவாய் அடிப்படையில் மரச்சாகுபடி பயனுள்ளதாக உள்ளது. இதில், மலைவேம்பு, பிளைவுட், தீக்குச்சி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு தேவை அதிகரித்துள்ளது. 9 ஆண்டுகளில், வருவாய் கொடுக்கிறது.ஆண்டு முழுவதும் பசுமை சூழல், குறைந்த நீர்த்தேவை, குறைந்த ஆண்டுகளில் அதிக வருவாய் என்ற அடிப்படையிலும் மலைவேம்பு நட ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால், கோழிப்பண்ணை வளாகத்தை சுற்றிலும், குறைந்த ஆண்டுகளில், அதிக பசுமையை உருவாக்கும் வகையில், 900 மலைவேம்பு கன்றுகள் நடவு செய்யப்பட்டு, சொட்டு நீர் பாசன வசதி செய்து பராமரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், மரக்கன்று நட விருப்பம் உள்ள விவசாயிகள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X