பொது செய்தி

தமிழ்நாடு

குன்றத்தில் விரைவு ரயில்கள் நிற்க பா.ஜ., வலியுறுத்தல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

மதுரை:'திருப்பரங்குன்றத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நகர் பா.ஜ., மாநில செயற்குழுவில் வலியுறுத்தப்பட்டது.

தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பார்வையாளர் கதலிநரசிங்கபெருமாள் முன்னிலை வகித்தார். பொதுசெயலாளர் செல்வகுமார் வரவேற்றார்.பொருளாளர் பாலமுருகன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். மாநில துணை தலைவர்கள் முருகானந்தம், மகா லட்சுமி, மாநில பொது செயலாளர் ஸ்ரீனிவாசன்,முன்னாள் தலைவர் முரளி, துணை தலைவர் ஹரி உள்ளிட்டோர் பேசினர். நிர்வாகி கஜேந்திரன் நன்றி கூறினார்.

குடிநீரில் சாக்கடை, அகற்றப்படாத குப்பை, ரோட்டில் கழிவுநீர் பிரச்னைகளை மாநகராட்சி சீரமைக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X