சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரடி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஆண்டிபட்டி, : ஆண்டிபட்டி அருகே மறவபட்டி விவசாய நிலங்களில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மறவபட்டி அருகே ருத்ராயப்பெருமாள் கோயில் மலைப்பகுதி ஒட்டி நுாற்றுக்கணக்கான ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு மலையில் இருந்து தரைப்பகுதிக்கு வந்த கரடியை விவசாயிகள் விரட்டி உள்ளனர். விளைந்த கடலையை கரடிகள் விரும்பி உண்ணும் என்பதால் மீண்டும் அப்பகுதிக்கு வந்து செல்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இரவில் விளை நிலங்களுக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர்.ஆண்டிபட்டி ரேஞ்சர் சுதந்திரபாண்டியன்,''மலைப்பகுதியில் கரடிகள், காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ளது. கரடிகள் தரைப்பகுதிக்கு அரிதாகவே வந்து செல்லும்.

இ வை நிரந்தர வழித்தடம் வைத்துக்கொள்ளாது. வழி தவறிய இப்பகுதிக்கு வந்துள்ளது. வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் உள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X