பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கலை, கலாசார அணி அறிமுக மாநாடு

Added : செப் 14, 2020
Share
Advertisement

மதுரை:மதுரையில் நகர், புறநகர் மற்றும் தேனி மாவட்ட பா.ஜ., கலை, கலாசார அணி நிர்வாகிகள் அறிமுக மாநாடு மாவட்ட தலைவர் வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது.

நிர்வாகிகள் கண்ணன், சின்னமணி முன்னிலை வகித்தனர். அணி மாநில தலைவர் காயத்ரி ரகுராம், பொது செயலாளர் கணேஷ்கர், பா.ஜ., மாநில செயலர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் கல்வாரி தியாகராஜன், பிரசார அணி மாநில செயலாளர் ராஜா, மகளிர் அணி செயலாளர் கோகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிராமிய கலைஞர் கோவிந்தராஜ் தலைமையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 300 நாட்டுப்புற கலைஞர்கள் பா.ஜ.,வில் இணைந்தனர்.ஏற்பாடுகளை நிர்வாகிகள் மாரிமுத்து, ஆனந்தவிக்னேஷ், முத்துராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X