பொது செய்தி

தமிழ்நாடு

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்' ஏழை மாணவர்களுக்கு ரூ.5 கட்டணத்தில் பாடசாலை

Added : செப் 14, 2020
Share
Advertisement

சிவகாசி : எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். அன்னசத்திரம் ஆயிரம் கட்டுவதை விட ஒரு ஏழைக்கு கல்வி கற்றுக் கொடுப்பது மிகவும் சிறந்தது என்பர்.

பள்ளியில் ஆசிரியர்கள் சிறப்பாக பாடம் நடத்தினாலும் மாணவர் சிலர் டியூசன் செல்வதையும் விரும்புவர். பெற்றோரும் தங்களது குழந்தைகள் கூடுதல் மதிப்பெண் பெற்று உயர் படிப்புக்கு செல்வதற்காக டியூசன் அனுப்புவது வழக்கம்.ஏழை மாணவர்களின் டியூசன் ஆசையை பூர்த்தி செய்கிறது சிவகாசி விவேகானந்தர் பவுன்டேஷன் மற்றும் ரைட் கிளப் ஆப் எஜூகேஷன் நிறுவனங்கள். இவற்றின் சார்பில் ரூ. 5 மட்டுமே கட்டணம் பெற்று தினமும் மாலையில் பாடம் கற்பிக்கப்படுகிறது. பெண்களுக்கு இலவச தையல், கம்ப்யூட்டர் கற்று தருகின்றனர். பெண்கள் சுய தொழில் துவங்கவும் உதவுகின்றனர்.

பொது நல நோக்குடன் 2006ல் துவக்கப்பட்ட விவேகானந்தர் பவுண்டேஷன் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. தெருக்களில் மாணவர்களுடன் இணைந்து துாய்மை பணியை செய்து வருவதால் மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இசை, நடனம், ஓவிய வகுப்புகள், தனித் திறனை மேம்படுத்தும் வகுப்புகளும் உண்டு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X