சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெக்கானிக்கை தாக்கியவருக்கு இரண்டு ஆண்டு சிறை

Added : செப் 14, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுாரில் பணிமனை உரிமையாளரை பாட்டிலில் தாக்கியவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதுகூடலுார் காசிம்வயல் பகுதியை சேர்ந்தவர் ரசிக், 37. இவர் கோழிக்கோடு சாலையில், இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனை வைத்துள்ளார். கடந்த, 2015 அக்., 21ம் தேதி இவருக்கும், மேல் கூடலுாரை சேர்ந்த நிஷாந்த்,32, என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதில், நிஷாந்த் பாட்டிலால் தாக்கியதில், ரசிக் தலையில் காயம் ஏற்பட்டது. கூடலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து நிஷாந்தை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு, கூடலுார் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. போலீஸ் தரப்பில் அரசு உதவி வக்கில் அமுதா ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாபு, குற்றவாளி நிஷாந்துக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X