பொது செய்தி

தமிழ்நாடு

சாமானியர்களை தேடும் ஆவண பேராசிரியர்களின் 'பப்பூன்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

மதுரை:சாமானிய மக்களின் வாழ்வியல் சூழலை ஆவணப்படுத்த கடைக்கோடி கிராமங்களை தேடி மதுரை அமெரிக்கன் கல்லுாரி தமிழ் பேராசிரியர் அரிபாபு, விஸ்காம் பேராசிரியர் கிதியோன் 'பப்பூன்' என்ற பெயரில் பயணிக்கிறார்கள்.

அவர்கள் கூறியதாவது: பல்வேறு கருத்துக்களை மையமாக கொண்டு பலர் யூ டியூப் தளத்தில் இயங்குகிறார்கள். இதில் இருந்து மாறுபட்டு சமூகத்துடன் உறவாட வேண்டும் என்று நினைத்தோம். அதன் தாக்கமாக 'பப்பூன்' என்ற பெயரில் யூ டியூப் தளம் துவங்கினோம். மேடை நிகழ்ச்சிகளில் இடையில் வந்து சிரிக்க வைக்கும் பப்பூன் ஒரு கதை சொல்லி. அவன் செய்யும் வேலையை தான் நாங்கள் கொஞ்சம் வித்தியாசமா செய்கிறோம். இந்த சமூகத்தால் அடையாளம் காணப்படாத அடித்தட்டு மக்கள், கலைஞர்களின் காலடி தேடி பயணிக்கிறோம்.

முதல் பதிவாக மறைந்த கிராமிய பாடகி பரவை முனியம்மாவை ஆவணம் செய்தோம். அதைதொடர்ந்து சக்கிமங்கலம் பகல் வேஷக்காரர்கள், கீழக்குயில்குடி மொட்டை மலை உப்பு குறவர்கள், சிவரக்கோட்டை கயிறு திரிப்போர், மானாமதுரை கலை கூத்தாடி, மைக்குடி கிடமாடு, திருநங்கை வர்ஷா என உலகறியா மனிதர்களை காணொலி வழி உலகறிய செய்துள்ளோம்.

அதிகம் வெளியே தென்படாத நரிக்குறவர், பாம்பாட்டிகள், அலைகுடிகள், கிடுகட்டி என பழம் பெரும் பெயர்களில் வாழும் மனிதர்களை கண்டுபிடித்தோம். ஓராண்டு பயணத்தில் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை பலர் தெரிந்து கொண்டனர். இன்னும் நீண்டதொரு பயணம் செய்து ஆவண படமாக்குவதே எங்கள் கனவு, என்றனர். இவர்களை வாழ்த்த 96593 84606.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X