சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போன் லேப்---டாப் திருட்டு: கூடலூரில் மூவர் கைது

Added : செப் 14, 2020
Share
Advertisement

கூடலுார்:கூடலுாரில் மொபைல் போன்கள்; லேப்-டாப் திருடியது தொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் மண்வயல் பகுதியை சேர்ந்தவர் அகில்,26. இவர், கூடலுாரில் மொபைல் போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். கடந்த, 11ம் தேதி இரவு கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்த நாள் வந்து பார்த்த போது, கடை உடைக்கப்பட்டு, விலை உயர்ந்த ஆறு மொபைல் போன்கள், லேப்-டாப் ஒன்று திருடப்பட்டது தெரியவந்தது. கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.எஸ்.ஜ.,கள் நிக்கோலஸ், ஜானகிராமன், எஸ்.எஸ்.ஜ., ராஜன், தலைமை காவலர்கள் இப்ராகிம், சுரேஷ் பாலாஜி கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், 'முதல் மைல் பகுதியை சேர்ந்த பைசல், 27, காசிம்வயல் சாதிக், 21, ராஜகோபாலபுரம் சியாபுதீன்,31, ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டனர்,' என்பது தெரிய வந்தது. அவர்கள் மூவரையும் நேற்று கைது செய்து பொருள்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X