பொது செய்தி

தமிழ்நாடு

மகிழ்ச்சி! உயர்வால் விவசாயிகள்.... உற்பத்தி அதிகரிப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம், பழநி, வேடசந்துார், நத்தத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயம் மட்டுமின்றி கால்நடைகளும் வளர்க்கின்றனர். விவசாயம் பொய்த்து போனால், கறவை மாடுகளின் பாலே முக்கிய வருவாயாக இருக்கிறது.

மழை பெய்கையில் மக்காச்சோளம், சோளம் பயிரிட்டு கால்நடைகளுக்கு தீவனங்களை தயார் செய்து வைத்துவிடுவர்.அடுத்த மழை பெய்து பசுந்தீவனம் கிடைக்கும் வரை மக்காச்சோளத் தட்டைகளே உணவாக கொடுப்பர்.கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பசும் புற்கள் வளர்ந்து பசுமையாக காட்சி அளிக்கிறது. கால்டைநடைகளின் மேய்ச்சலுக்கு இது ஏற்றதாக உள்ளது. இதனால் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், தனியார் பால் நிறுவனங்களும் கொள்முதல் விலையை அதிகரித்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.அம்பிளிக்கை விவசாயி திருமூர்த்தி: ஊரடங்கு தளர்வுக்கு பின் பாலின் தேவை அதிகரித்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி ரூ.24 க்கு கொள்முதல் செய்கின்றனர். தொடர் மழையால் ஒரு கறவை மாடு குறைந்தபட்சம் ஒரு நேரத்திற்கு ஒரு லிட்டர் அதிகமாக பால் கொடுக்கிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X