பொது செய்தி

தமிழ்நாடு

எப்போது! சாலையோரம் மரக்கன்று நட்டு பராமரிப்பது ....கேள்விக்குறியாகும் பசுமைச்சாலை திட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

காரியாபட்டி : மாவட்டத்தில் சாலையோரம் மரக்கன்று நட்டு பராமரிக்க மத்திய அரசு ரூ.பல கோடியை வனத்துறைக்கு ஒதுக்குகிறது. எனினும் அதிகாரிகள் சிலரின் மெத்தனத்தால் தேசிய பசுமைச்சாலை திட்டம் கேள்விக்குறியாகி வருகிறது.

புதிய சாலை, சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் ஒரு மரத்திற்கு பதிலாக 12 மரக்கன்றுகளை நட்டு மரமாகும் வரை பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது ஏட்டளவில் மட்டுமே அதிகாரிகளால் பின்பற்றப்படுகிறது. தனியார் தொண்டு நிறுவனம், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் தங்களின் சொந்த நிதியில் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதை அதிகாரிகள் செய்தில்லை.தேசிய பசுமை நெடுஞ்சாலை திட்டம் மூலம் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் மரக்கன்றுகளை பல ஆயிரம் கிலோ மீட்டர் துாரத்துக்கு நட்டு பராமரிக்க மாவட்டம் தோறும் வனத்துறைக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் ரூ.பல கோடியை வழங்கி வருகிறது.

ஒரு சில இடங்களில் மட்டுமே மரக்கன்றுகளை நட்டு முறையாக பராமரித்து வருகின்றனர். ஏனைய இடங்களில் அதிகாரிகளின் மெத்தனத்தால் பசுமைச்சாலை திட்டம் முடங்கி உள்ளது..........கண்காணிப்பதில்லைசாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க மத்திய அரசு வழங்கும் ரூ.பல கோடி அதிகாரிகள் சிலரால் ஏப்பம் விடப்படுகிறது. உச்ச நீதிமன்றம் பல முறை எச்சரித்தும் திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. மரக்கன்றுகளை நட்டு இரும்பு வேலி அமைத்து கணக்கு காட்டி விடுகின்றனர். இப்பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்காணிப்பதில்லை.- செந்தில்குமார், சமூக ஆர்வலர், காரியாபட்டி............

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X