பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : செப் 14, 2020
Share
Advertisement

வேன் பறிமுதல்வேடசந்துார்: எஸ்.ஐ., குமார் தலைமையில் போலீசார், லட்சுமணன்பட்டி நால்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த மினிவேனை சோதனையிட்டதில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிவந்தது தெரிந்தது. டிரைவர் செந்தில் 30, தப்பி ஓடினார். வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஒருவர் கைதுஎரியோடு: கோவிலுார் அடுத்த ஆனைக்கவுண்டன்பட்டி ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திடீர் சோதனையில் ஆர்.கோம்பையை சேர்ந்த சீனிவாசன் 23, டிராக்டரில் மணல் அள்ளியது தெரிந்தது. எரியோடு போலீசார் சீனிவாசனை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

துப்பாக்கி விற்றவர்கள் கைதுதிண்டுக்கல்: தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு சிறுமலை பிரிவு அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த யோவானை 41, பிடித்து விசாரித்ததில் நாட்டு துப்பாக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இவரது சகோதரர் ஆரோன் 45, தவசிமடை கிருஷ்ணன் 52, நொச்சியோடைப்பட்டி பரதன் 48 ஆகியோர் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. நால்வரையும் கைது செய்த போலீசார், ஒரு துப்பாக்கி, துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட 2 பேரல்களை பறிமுதல் செய்தனர்.

வாலிபர் பலிதிண்டுக்கல்: தங்கமாபட்டிபுதூர் ஹரிக்குமார் 25. நேற்று அதிகாலை 3:00 மணிக்கு திண்டுக்கல்லில் உள்ள நண்பர் வீட்டில் இருந்து ஊருக்கு டூவீலரில் புறப்பட்டார். நந்தவனப்பட்டி சர்வீஸ் ரோட்டில் செல்கையில் நிலைதடுமாறி ரோட்டில் இருந்த தடுப்புச் சுவரில் மோதி இறந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

டிராக்டர் பறிமுதல்அய்யலூர்: சுக்காம்பட்டி பூலாங்குளத்தில் அரசு அனுமதியின்றி மண் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வடமதுரை போலீசார், மண் அள்ளிய எஸ்.குரும்பபட்டி ரவிச்சந்திரன் 50, கந்தமநாயக்கனூர் நந்தகுமார் 32, வத்தலதோப்பம்பட்டி டிரைவர் செல்வம் 22 ஆகியோரை கைது செய்தனர். மேலும் மண் அள்ளும் இயந்திரம், 2 டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X