சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைப்பு ; கிராமத்தினர் ரோடு மறியல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் இறந்தவரின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து கிராமத்தினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

உச்சப்பட்டி மணிகண்டன் 45, திருமணமானவர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கீதாவுக்கும் தொடர்பு இருந்தது. நேற்று கீதா வீட்டில் மணிகண்டன் துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். விருவீடு போலீசார் உடலை கைப்பற்றினர். மணிகண்டனின் உறவினர்கள், கீதா குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதிய வலியுறுத்தினர். பின் உடலை வாங்காமல் ஊருக்கு கிளம்பினர். மணிகண்டனின் உடல் ஆம்புலன்சில் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கண்ணன் நகர் அருகே ஆம்புலன்சை மறித்த உச்சப்பட்டி கிராமத்தினர், இறந்தவரின் உறவினர்கள் கையொப்பம் இல்லாமல் உடலை எப்படி அனுப்பி வைத்தீர்கள் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.
ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். கூடுதல் எஸ்.பி., வெள்ளைச்சாமி, டி.எஸ்.பி., முருகன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X