பொது செய்தி

தமிழ்நாடு

சுய பாதுகாப்பு அவசியம்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்பு மெல்ல குறைந்தாலும் பொதுமக்கள் சுய பாதுக்காப்போடு இருக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஜூலை, ஆகஸ்ட்டில் கோர தாண்டவம் ஆடியது. இறப்பு விகிதமும் அதிகரித்தது. தற்போது தொற்று பாதிப்பு குறைந்து, டிஸ்சார்ஜ் ஆவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 7796 பேரில் 6856 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 791 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் சுய பாதுகாப்போடு இருக்க வேண்டும் என அரசு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்கள் கூறியதாவது: கொரோனா அறிகுறி இருந்தால் மெடிக்கல் மருந்துகளை உட்கொள்வதோ, சுய மருத்துவமோ செய்ய வேண்டாம். தனிமனித இடைவெளியை கடைபிடித்தாலே தொற்று பரவலில் இருந்து தப்பிக்கலாம்.கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு தொற்று எளிதில் பரவ வழி வகுக்கும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X