அரசியல் செய்தி

தமிழ்நாடு

தகுதி, போட்டித்தேர்வுகள் வாழ்க்கைக்கான தேர்வுகள் அல்ல அமைச்சர் உதயகுமார் பேச்சு

Added : செப் 14, 2020
Share
Advertisement

மதுரை:'தகுதி, போட்டித்தேர்வுகள் வாழ்க்கைக்கான தேர்வுகள் அல்ல, தேர்வுகளின் ஒரு பகுதி தான்' என, மதுரையில் நடந்த மாணவர்களுக்கான திறன் மேம்பாடு பயிற்சி முகாமில்
அமைச்சர் உதயகுமார் பேசினார்.

கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர்விசாகன் தலைமை வகித்தார். தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தனர்.
காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரி முதல்வர் புவனேஸ்வரன் வரவேற்றார்.முகாமை துவக்கி அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

பேசுவது எங்கு குறைகிறதோ அங்கு பிரச்னைகள் எழுகின்றன. மாணவர்கள் பெற்றோருடன் மனம் விட்டு பேச வேண்டும்.மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., முதல்படத்தில் வாய்ப்பு
மறுக்கப்பட்டவர். ஆனால் சினிமாவில் அவர் உச்சம் தொட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா நெருப்பாற்றில் நீந்தி தான் முதல்வரானார். மருத்துவம், பொறியியல் மட்டும் தான் வாழ்க்கை அல்ல.

'நீட்' தேர்வை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.இந்தியா முழுதும் இன்று நடக்கிறது.
தமிழகத்தில் 154 நகரங்களில் 342 மையங்களில் 16 லட்சம்பேர் எழுதியுள்ளனர். இங்கு மட்டும் ஏன் தற்கொலை செய்கிறார்கள். மாணவர்கள் படிப்பதை மட்டும் பாருங்கள். அவர்களை ஆளாக்குவதை அரசு பார்த்து கொள்ளும், என்றார்.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருதுஅழகுராஜ், மாநில மனநல திட்ட அலுவலர் டாக்டர் ராமசுப்பிரமணியன், பேராசிரியர்கள் கண்ணன், ஜெனட் சங்கர், ராஜூ, புலவர் சங்கரலிங்கம்
உள்ளிட்டோர் பேசினர். பாரதி யுவ கேந்திரா நிறுவனர் பாலு ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X