பொது செய்தி

தமிழ்நாடு

வண்ண சாக்பீஸ் தயாரிப்பு மும்முரம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பள்ளி, கல்லுாரிகள் திறப்பை எதிர்பார்த்து கலர் சாக்பீஸ் தயாரிப்பு பணி மும்முரமாக நடக்கிறது.

மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சாக்பீஸ் தயாரிப்பு கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. பிளாஸ்டர் ஆப் பாரிசை நீருடன் கலந்து அச்சில் வார்த்து வெள்ளை சாக்பீஸ், நீருடன் கலர்பொடிகள் சேர்ந்து வண்ண சாக்பீஸ் தயாரிக்கின்றனர்.இங்குள்ள கம்பெனிகளில் தினமும் 2 லட்சத்திற்கும் மேல் சாக்பீஸ் தயாராகின்றன. ஊரடங்கால் கல்விநிலையங்கள் மூடப்பட்டதால், 6 மாதமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் அளித்துள்ளதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

செப்.21 முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் பள்ளி, கல்லுாரிக்கு வரலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரிகள் திறப்பை எதிர்பார்த்து சாக்பீஸ் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. நுாறு சாக்பீஸ் கொண்ட பெட்டி விலை ரூ.18.தயாரிப்பாளர் ஸ்டீபன் கூறியது: ஊரடங்கால் சாக்பீஸ் தயாரிப்பு பாதித்தது. உள்ளூர் விற்பனைகூட இல்லாததால் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாமல் போனது. வேறு வழியின்றி சிலரை வேலையை விட்டு நீக்கும் நிலை ஏற்பட்டது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X