பொது செய்தி

தமிழ்நாடு

செய்தி சில வரிகளில்...

Added : செப் 14, 2020
Share
Advertisement

தன்னார்வலர் விருதுதிண்டுக்கல்: சர்வதேச முதியோர் தினத்தில் முதியோர் நலனில் அக்கறையோடு செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், தனிநபருக்கு விருது வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் தங்களின் நடவடிக்கை குறித்த விவரங்கள், நாளிதழ்களில் வந்த செய்தி, புகைப்படத்துடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் செப்.15 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு 0451-2460092 ல் பேசலாம்.

மையம் மூடல்பழநி: பழநியாண்டவர் கல்லுாரி வளாகத்தில் 'கோவிட் கேர் சென்டர்' செயல்பட்டு வந்தது. கல்லுாரியில் நடைபெற உள்ள தேர்வுக்காக கோவிட் கேர் மையத்தை அரசு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளனர். கல்லுாரி வளாகத்தில் எடுக்கப்பட்டு வந்த சோதனை மாதிரிகள் சேகரித்தல் மற்றும் கொரோனா குறித்த செயல்பாடுகள் அனைத்தும் இனி அரசு மருத்துவமனையில் நடைபெறும். கல்லுாரியில் தற்காலிகமாக கோவிட் மையம் மூடப்படுகிறது.

குறுகிய ரோட்டிற்கு விடிவுவடமதுரை: நான்கு வழிச்சாலையில் செல்லும் வாகனங்களால், வடமதுரையில் இருந்து நால்ரோடு சந்திப்பு வரை 400 மீட்டருக்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல இடங்களில் இருபக்கமும் கொட்டப்பட்ட மண் ரோட்டில் தேங்கியதால் ஒரு வழி ரோடாக குறுகியது. தற்போது ரோட்டில் உள்ள மண்ணை அகற்றி, ஒட்டன்சத்திரம் வரை 43 கி.மீ., க்கு ரோட்டை 10.5 மீட்டருக்கு அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் குறுகிய ரோட்டிற்கு விடிவு பிறந்துள்ளது.-----

விழிப்புணர்வு கூட்டம்பட்டிவீரன்பட்டி: திருட்டை தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ், ஊர்காவல் சங்கம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமை வகித்தார். எஸ்.ஐ., தினேஷ், ஊர்காவல் சங்க தலைவர் சவுந்திரபாண்டியன் முன்னிலை வகித்தனர். காவல் சங்க செயலாளர் சுப்பையா வரவேற்றார். 'புதிய நபர்கள் தங்களது தெருக்களில் சுற்றி திரிந்தால் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்க வேண்டும். நடைபயிற்சி செல்லும் பெண்கள் நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும்' என, விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

போலீசார் குவிப்பு சின்னாளபட்டி: செட்டியபட்டி பைனான்சியர் கருப்பசாமி 38. மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்கிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லுாரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. மாணவியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருவரும் மாயமாகினர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிலர், கருப்பசாமியின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தினர். அருகில் இருந்து ஆடு வளர்ப்பு கூடத்திற்கும் தீ வைத்தனர். ஆத்துார் தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இருதரப்பு பிரச்னையை தவிர்க்க, இப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.ரத்த தான முகாம்திண்டுக்கல்: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன், செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். இதில் ரத்ததானம் வழங்கியோருக்கு சான்றிதழ் வழங்கினர்.'கொடை'யில் கடுங்குளிர்கொடைக்கானல்: குளு, குளு நகரில் தென் மேற்கு பருவமழை சில வாரங்களாக வெளுத்து வாங்கியதால் மேலும் நகரம் குளிர் வாட்டி வதைத்தது. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்காவை ஏராளமானோர் சுற்றி பார்த்தனர். நேற்று காலை முதல் சாரல் மழையும் அவ்வப்போது தரையிரங்கிய மேகக்கூட்டத்தால் ரம்மியமான சூழல் நிலவியது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியதால் சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.சங்கத்தினர் மனுவேடசந்துார்: திண்டுக்கல் வழியே சென்னை சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் மோசஸ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி அளித்த மனு: போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டம், தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என, கூறியிருந்தனர்.ரோடு மறியல்பழநி: பஸ் ஸ்டாண்ட் அருகே, கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் புதிய தமிழகம் கட்சியினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அப்போது, விருதுநகரில் கட்சி நிர்வாகியை கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தினர்.செயற்குழு கூட்டம்ஒட்டன்சத்திரம்: பா.ஜ.,மாவட்டசெயற்குழு கூட்டத்தில் தலைவர் கனகராஜ் தலைமைவகித்தார்.பொதுச் செயலாளர் வீரமணி வரவேற்றார். மாநில துணை தலைவர் முருகானந்தம் பேசினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், சதாசிவம்பங்கேற்றனர். 'அரசு அனுமதி பெற்ற வங்கி ஏ.டி.எம்.,களைபூலத்துார் கிராமத்தில் அமைக்க வேண்டும். ஒட்டன்சத்திரம்தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் 2 இடங்களில் ரவுண்டானா அமைக்க வேண்டும். காய்கறிகளை பதப்படுத்த குளிர்சாதன வசதிவேண்டும்' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X