கணவர் மரணம் மனைவிக்கு ஜாமின்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மரணம் மனைவிக்கு ஜாமின்

Added : செப் 14, 2020
Share

மதுரை:மதுரை கொடிமங்கலம் மகாலட்சுமி. இவரை வைகை ஆற்றில் சாக்கு மூடைகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டதாக நாகமலை புதுக்கோட்டை போலீசார் செப்.,4ல் கைது செய்தனர்.

மகாலட்சுமி, 'கணவர் பாலமுருகன் விபத்தில் சிக்கி இறந்தார். இறுதிச்சடங்கில் பங்கேற்க ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்தார். விடுமுறை நாளான நேற்று நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். அரசு தரப்பில்
ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி: சூழ்நிலை கருதி மனுதாரருக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. போலீசாரின் விசாரணைக்கு தேவையானபோது மனுதாரர் ஆஜராக வேண்டும். தலைமறைவாகக்கூடாது என்றார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X