சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க தி.மு.க., தான் காரணம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ஒட்டன்சத்திரம் : 'மாணவர்கள் தன்னம்பிக்கை இழக்க தி.மு.க., தான் காரணம்' என, பா.ஜ., மாநில துணை தலைவர் முருகானந்தம் கூறினார்.

அவர் கூறியது: தேர்வுக்கு பயந்து மாணவர்கள் தற்கொலை செய்வது வருத்தம் தரக்கூடிய செயல். இதை அரசியலாக்கும் தி.மு.க.,வை பா.ஜ., கண்டிக்கிறது. நீட் தேர்வு மட்டுமின்றி, 10, 12 ம் வகுப்பு தேர்வுக்கும் மாணவர்கள் தற்கொலை செய்கிறார்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்த, பிரதமர் மோடி 'பரீட்சைக்கு பயமேன்' என்ற புத்தகத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொடுக்கச் சொன்னார்.தமிழகத்தில் பல பேருக்கு கொடுத்துள்ளோம். தி.மு.க., மற்றும் அதனை சார்ந்தவர்கள் மாணவர்கள் பரீட்சையை பார்த்து பயப்பட வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

பயத்தை ஏற்படுத்துவதே அவர்கள் தான். மாணவர்களின் தற்கொலைக்கு காரணமும் அவர்கள் தான். வரும் தேர்தலில் பா.ஜ., உடன் கூட்டணி வைப்பவர்கள் தான் வெற்றி பெறுவர், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X