பொது செய்தி

தமிழ்நாடு

வழியோர கண்மாய்களை எட்டாத குடகனாறு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கன்னிவாடி : குடகனாற்று நீர் வழியோர கண்மாய்களை தவிர்க்கும் சூழலால், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ஆத்துார் நீர்தேக்கத்தில் இருந்து வெளியேறும் நீரில் உருவாகும் குடகனாறு, ஆத்துார், திண்டுக்கல் மேற்கு, வேடசந்துார் தாலுகா கிராமங்களின் அடிப்படை நீராதாரமாகும். ஐந்து ஆண்டுகளாக வரத்து இல்லாத நிலையில் குடகனாறு மீட்பை விவசாயிகள் முன்னெடுத்தனர். செப்.5ல் தண்ணீர் திறந்த போதும், ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைவால் தண்ணீர் கடப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த 8நாட்களில் 12 கி.மீ.,யை தான் கடந்துள்ளது.பாசன கண்மாய்களை தவிர்த்து, குடகனாற்றில் நேரடியாக செல்லும் வகையில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத வகையில் பாசன கண்மாய்களின் வரத்து தடைபட்டுள்ளதால் இப்பகுதியினர் ஏமாற்றத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X