பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை வள கணக்கெடுக்கும் பணி

Added : செப் 14, 2020
Share
Advertisement

உசிலம்பட்டி:உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி வளாகத்தில்
உள்ள பறவைகள், விலங்குகள், தாவரங்கள் கணக்கெடுக்கும் பணியை கல்லுாரி இயற்கைவள குழுமத்தினர் நடத்தினர்.

கல்லுாரி வளாகத்தில் சந்தனம், வேம்பு, புங்கன், புளி, மருது, மகாகனி உள்ளிட்ட மரங்கள்
உள்ளன. ஊரடங்கால் வளாகத்தில் நடமாட்டம் இல்லாமல் உள்ளதால் பறவைகள், பூச்சி
இனங்கள், சிறுவிலங்குளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவற்றின் எண்ணிக்கையை
இயற்கைவள பாதுகாப்பு குழும ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர்செந்தில்குமார், மாணவர்கள் சண்முகம், தமிழ்ச்செல்வன், ஆசிக்அலி, ஸ்ரீராம்விக்னேஷ்வர் கணக்கெடுத்தனர்.

புதிய வகை பறவைகளாக அரசவால் ஈ பிடிப்பான், கழுகு ஆந்தை, வால்காக்கை,
கொண்டையளத்தி உள்ளிட்ட 30ற்கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் சிறு விலங்குகள்
நடமாட்டம் உள்ளதை கண்டறிந்தனர். மேலும் இரவில் நடமாடும்விலங்குகள், பறவைகள் குறித்து கணக்கிட டிராப் கேமரா பொருத்தி கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X