பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்தி

Added : செப் 14, 2020
Share
Advertisement

பேத்தி பிறந்த நாளுக்குகேக் வாங்க சென்றவர் பலிஉசிலம்பட்டி: உசிலம்பட்டி பூதிப்பரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் 52. தனது மகள் காவியாவுடன் பேத்தியின் பிறந்த நாளுக்கு மொபெட்டில் (ஹெல்மெட் அணியவில்லை) திருமங்கலம் விலக்கு அருகே உள்ள பேக்கரியில் கேக் வாங்கி விட்டு திரும்பினார். அப்போது தேனியில் இருந்து மதுரை சென்ற லாரி மோதியது. தலையில் காயமடைந்த பெருமாள் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார். காவியா லேசான காயத்துடன் தப்பினார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா: 2 பெண்கள் கைதுதிருப்பரங்குன்றம்: மதுரை தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சென்றபோது ஒருவர் ஓடி தலைமறைவானார். அங்கிருந்த 2 பெண்களிடம் ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது. அவர்கள் அப்பகுதி வள்ளி, ராணி என தெரிந்தது. கைது செய்யப்பட்டனர். தலைமறைவான சீனிவாசா காலனி வெங்டேசனை போலீசார் தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X