தங்க ஸ்டட் லைனிங் கொண்ட கொரோனா பேஸ் ஷீல்டு..!

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement

கொரோனா வைரஸ் தாக்கத்தில் தொடர்ந்து தற்போது பல தனியார் நிறுவனங்கள் கொரோனா மாஸ்க் மற்றும் ஃபேஸ் ஷீல்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.



latest tamil news



வித்தியாசமான தொழில்நுட்பங்கள் கொண்ட உயர்ரக மாஸ்க்குகள் தற்போது தயாராகின்றன. இதனையடுத்து தற்போது பிரான்ஸ் நாட்டில் பிரபல ஃபேஷன் நிறுவனமான லூயி விடான் என்ற நிறுவனம் தங்க ஸ்டட் லைனிங் கொண்ட பேஸ் ஷீல்டை தயாரித்துள்ளது.இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செல்வந்தர்களை வாடிக்கையாளர் களாகக் கொண்ட இந்த நிறுவனம் அவர்களைக் கவர்வதற்காக சாதாரண பேஸ் ஷீல்டின் ஓரத்தில் தங்க ஸ்டட் லைனிங் இட்டுள்ளது.


latest tamil news



வரும் அக்டோபர் 30ஆம் தேதி இந்த ஃபேஸ் ஷீல்டு இணையத்தில் விற்கப்பட உள்ளது. இதனை வாங்க ஐரோப்பிய செல்வந்தர்கள் பலர் ஆவலாக உள்ளனர். உலக அளவில் புகழ்பெற்ற ஃபேஷன் நிறுவனமான இது, தனது லாபத்தில் ஒரு பகுதியை பாரிஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளது. இதற்கு அதிக வரவேற்பு மற்றும் பாராட்டு கிடைத்துள்ளது. முன்னதாக ஜப்பானில் வித்தியாசமான அனிமேஷன் கதாபாத்திர தோற்றம் கொண்ட ஷீல்டுகள் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X