உத்தவ் தாக்கரேயால் முளைத்த பிரச்னை

Updated : செப் 15, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement
மஹாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனாவைச் சேர்ந்தவர். காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து, கூட்டணி அரசு நடத்தி வருகிறார். ஆட்சி நிர்வாகத்தில், எந்த பதவியிலும் இல்லாமல், திடீரென முதல்வரானார். நன்றாக உழைப்பார் என, காங்., உட்பட, கூட்டணிக் கட்சிகள் நம்பின. ஆனால், இவருடைய நடவடிக்கைகள் ஏமாற்றிவிட்டன.'ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங்
டில்லிஉஷ், delhiush, uddav, uddavthackeray, dmkmp, PmModi,

மஹாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனாவைச் சேர்ந்தவர். காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து, கூட்டணி அரசு நடத்தி வருகிறார். ஆட்சி நிர்வாகத்தில், எந்த பதவியிலும் இல்லாமல், திடீரென முதல்வரானார். நன்றாக உழைப்பார் என, காங்., உட்பட, கூட்டணிக் கட்சிகள் நம்பின. ஆனால், இவருடைய நடவடிக்கைகள் ஏமாற்றிவிட்டன.'ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம்; இப்போது நடிகை கங்கனாவின் அலுவலகத்தை இடித்தது என, தேவையில்லாத பிரச்னைகளில் ஈடுபட்டு வருகிறார்' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கடிந்து கொண்டுள்ளார். இதை உத்தவ் தாக்கரேவிடமே சொன்ன பவார், 'நம் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக புனேவில் அதிகம். இதை தடுக்க முயற்சி எடுப்பதை விட்டு, இப்படி நடிகர்கள் பிரச்னைகளின் பின்னால் போவது சரியில்லை' என, அட்வைஸ் செய்துள்ளாராம்.உத்தவ் தாக்கரேவின் சமீபத்திய நடவடிக்கைகள், காங்கிரசுக்கும் பிடிக்கவில்லை. உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரே, நம்ம ஊர் உதயநிதி மாதிரி, சினிமாவில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவருக்கு, பல நடிகர், நடிகையர் நண்பர்களாக உள்ளனர். இதுதான் பிரச்னை என்கின்றனர், கூட்டணி கட்சி தலைவர்கள். மேலும் வட மாநில, 'டிவி'க்கள், சுஷாந்த் மற்றும் கங்கனா விவகாரங்களை பெரிதுப்படுத்தி, உத்தவின் பெயருக்கு வேட்டு வைத்துவிட்டன. பெருத்த எதிர்பார்ப்புடன் முதல்வரான உத்தவ், இப்போதெல்லாம் அலுவலகத்திற்கு வருவதே கிடையாது. எல்லாம் வீட்டிலிருந்தே தான். அதிலும் வீட்டம்மாவின் ஆதிக்கமும் அதிகம். 'எப்போது கூட்டணி கலகலக்கும்; உள்ளே நுழையலாம் என, பா.ஜ., காத்திருக்கிறது. இதை உணர்ந்து, உத்தவ் செயல்பட வேண்டும்' என்கின்றனர், கூட்டணி கட்சியினர்.


விரக்தியில் தி.மு.க., - எம்.பி.,


தி.மு.க.,வில், துரைமுருகன் பொதுச் செயலராகவும், டி.ஆர்.பாலு பொருளாளராகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். ஆ.ராஜா மற்றும் பொன்முடி ஆகியோருக்கும், பதவிகள் வழங்கப்பட்டன. இது, தி.மு.க.,, சீனியர்கள் சிலரை, வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.குறிப்பாக, ஒரு சீனியர் பிரமுகர், மிகவும் நொந்து போயுள்ளார். 'நான் மிகவும் சீனியர். யாரை கட்சியில் நான் சேர்த்துவிட்டேனோ, அவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு, திருச்சியிலிருந்து டிக்கெட் எடுத்து வரவழைத்ததே நான் தான். ஆனால், அவர் இப்போது பெரிய ஆளாகிவிட்டார். என்னை ஒதுக்கிவிட்டனர்' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.அந்த எம்.பி.,யின் மனநிலையை அறிந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரிடம் போனில் பேசி ஆறுதல் சொல்லியிருக்கிறார். 'பலமுறை எம்.பி.,யாக இருந்தவர், அந்த பிரமுகர். இனிமேல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும்' என்கின்றனர், தி.மு.க.,வினர்.


தமிழ் தெரிந்த மத்திய அமைச்சர்மத்திய விமானத் துறை அமைச்சராக இருப்பவர், ஹர்தீப் சிங் புரி. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு சீக்கியர். ஐ.எப்.எஸ்., அதிகாரியாக பணியாற்றியவர். இந்திய துாதுவராக வெளிநாட்டில் பணிபுரிந்தவர். இலங்கையிலும் இந்திய துாதுவராக பணியாற்றியுள்ளார். பிரபாகரனையும் சந்தித்து பேசியவர். இந்திய - -இலங்கை ஒப்பந்தத்தின் போது, இலங்கையில் இருந்துள்ளார். தமிழில், எழுத பேச தெரிந்தவர். இவருடைய மகள், ஒரு தமிழரை மணந்துள்ளார். தனக்கு தமிழ் தெரியும் என மகிழ்ச்சியோடு சொல்லும் ஹர்தீப் சிங் புரி, 'என் மாப்பிள்ளை தமிழர்; தமிழகத்தின் மீது எங்கள் குடும்பத்திற்கு அதிக ஈடுபாடு' என்கிறார்.தமிழக கோவில்கள் மீது அதிக மரியாதை வைத்துள்ளார், புரி. அடுத்த மாதம் சென்னை வரவிருக்கும் இவர், சில கோவில்களுக்கு செல்லவிருக்கிறாராம். அத்துடன், காஞ்சிபுரம் சென்று, சங்கராச்சார்யாரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். 'இதுவரை அவரோடு போனில் தான் பேசியிருக்கிறேன். காஞ்சி மடம் சென்று சங்கராச்சார்யாரை சந்திக்க ஆவலோடு இருக்கிறேன்' என்கிறார், புரி.


தமிழக ஊழலால் பிரதமர் 'அப்செட்!'விவசாயிகளுக்கான பிரதமரின் நிதி மற்றும் வீடு கட்டும் திட்டங்களில், தமிழகத்தில், 110 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்துள்ளது. தமிழக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'இந்த விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.பிரதமர் மோடியின் கனவு திட்டம் இது. இதில் இப்படி ஊழல் நடந்துள்ளதே என, பிரதமர் கவலைப்பட்டாராம். 'விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தோடு, மோடியால் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தமிழகத்தில் ஊழலுக்கு வழிகாட்டி விட்டதே' என, பா.ஜ.,வினரும் வருத்தப்படுகின்றனர். இந்த ஊழல் குறித்த முழு விபரங்களையும் உடனடியாக தரும்படி, உளவுத் துறையினரை, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊழலில் தமிழக அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டுள்ளனரா எனவும் அறிக்கை தருமாறு உளவுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு, இந்த திட்டத்தில் ஊழல் நடக்காதவாறு இருக்க என்ன செய்யலாம் எனவும் ஆலோசனை செய்து வருகிறார் மோடி.'சில விதிமுறைகளை, மத்திய அரசு தளர்த்தியது தான் முறைகேடு ஏற்பட வழியாகி விட்டது. தமிழக அரசுக்கும், இந்த ஊழலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, தமிழக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும், இதை மத்திய அரசு ஒப்புக் கொண்டதாக தெரியவில்லை. சி.பி.ஐ., விசாரணையில் தான் உண்மை வெளிவரும் என்கின்றனர் பா.ஜ.,வினர். 'இந்த ஊழல் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற, தமிழக அரசு சிபாரிசு செய்தால், உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படும்' என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X