சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மும்முனை மின்சாரம் கோரிவிவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே சம்பா நடவுக்கு சீரான மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பெண்ணாடம் துணை மின் நிலையம், மேலுார் பீடரில் இருந்து பெ.கொல்லத்தங்குறிச்சி, எரப்பாவூர், மேலுார், தொளார் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.கடந்த வாரம் முதல் பாசன மோட்டார்களுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் எவ்வித அறிவிப்புமின்றி, அடிக்கடி தடை ஏற்பட்டது. இதனால் பெ.பொல்லத்தங்குறிச்சி பகுதியில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சம்பா நடவு பணிகள் பாதித்து, விவசாயிகள் சிரமம் அடைந்தனர். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று காலை 9:00 மணியளவில் பெண்ணாடம் - பெ.கொல்லத்தங்குறிச்சி சாலையோரமுள்ள வயலில் மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X