பொது செய்தி

தமிழ்நாடு

குடற்புழு நீக்க மாத்திரை முகாம் இன்று துவக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் ஒரு வயது முதல், 19 வயதிற்குட்பட்டோருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் இன்று முதல் நடக்கிறது.

கடலுார் மாவட்டத்தில், ஒரு வயது முதல், 19 வயதிற்குட்பட்டோருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் முதற்கட்டமாக இன்று (14ம் தேதி) முதல், வரும் 19ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக 21ம் தேதி முதல், 26ம் தேதி வரையும் (திங்கள், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில்) நடக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு 28ம் தேதி நடக்கும் மூன்றாம் கட்ட முகாமில் மாத்திரை வழங்கப்படும். இதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மூலமாக இலவசமாக மாத்திரை வழங்கப்படும். இப்பணியில் பொது சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூக நலத்துறை பணியாளர்கள் என, 3655 பேர் ஈடுபட உள்ளனர். இத்தகவலை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X