வேப்ப மரத்தில் பால் பொது மக்கள் பரவசம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேப்ப மரத்தில் பால் பொது மக்கள் பரவசம்

Added : செப் 14, 2020
Share
புதுச்சத்திரம்; கொத்தட்டையில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 70; கோவில் பூசாரி. இவரது வீட்டில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு பால் வடியத் துவங்கியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து மரத்தில் இருந்து பால் வடிவதை

புதுச்சத்திரம்; கொத்தட்டையில் வேப்ப மரத்தில் பால் வடிந்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டையைச் சேர்ந்தவர் கலியபெருமாள், 70; கோவில் பூசாரி. இவரது வீட்டில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து நேற்று மாலை 6:00 மணிக்கு பால் வடியத் துவங்கியது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து மரத்தில் இருந்து பால் வடிவதை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு சென்றனர். சிலர் பக்தி பரவசத்துடன் மரத்தை தொட்டு வணங்கி சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X