சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி பெண் பலி போலீசார் விசாரணை

Added : செப் 14, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; விருத்தாசலத்தில் லாரி மோதி, மகனுடன் பைக்கில் சென்ற தாய் இறந்தார்.அரியலுார் மாவட்டம், சிலுப்பனுாரைச் சேர்ந்தவர் ரவி மனைவி சாந்தி, 46. உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், புதுச்சேரி ஜிப்மருக்கு நேற்று அதிகாலை, தனது மகன் அமுதரசனுடன் பைக்கில் (டி.என்.39 - பி.ஆர்., 9426) விருத்தாசலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.காலை 5:30 மணியளவில் விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில் சென்றபோது, சாலையில் உலர வைப்பதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த கம்பு கதிர்களின் மீது பைக் மோதியது.நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்த சாந்தி மீது அவ்வழியாக சேலம் நோக்கி சென்ற லாரி மோதியது. பலத்த காயமடைந்த சாந்தி அதே இடத்தில் இறந்தார். அமுதரசன் அதிஷ்டவசமாக காயங்களின்றி தப்பினார்.விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X