சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., ஆட்சியின் மின்வெட்டை சரிசெய்தது அ.தி.மு.க., தான்: மாஜி எம்.பி., பேச்சு

Added : செப் 14, 2020
Share
Advertisement

வேப்பூர்; நல்லூர் அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய இளைஞர் இளம்பெண் பாசறை உறுப்பினர் நியமன கூட்டம், வேப்பூர் மற்றும் நகரில் நடந்தது.

ஆவின் சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். கலைச்செல்வன் எம்.எல்.ஏ., இளைஞர், இளம்பெண் பாசறை மாவட்ட செயலர் ரமேஷ், விருத்தாசலம் நகர முன்னாள் தலைவர் அருளழகன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி நாகராஜன் வரவேற்றார்.கூட்டுறவு சங்க தலைவர்கள் கருப்பையா, ஆறுமுகம், மாவட்ட மருத்துவரணி பொருளாளர் சம்பத், முன்னாள் ஒன்றிய செயலர் தங்கதுரை, ஒன்றிய துணை செயலர் வேல்முருகன், நிர்வாகி குமரேசன், கண்ணன், வழக்கறிஞர்கள் குமரேசன், குமரவேல், கிளை செயலர்கள் சண்முகம், பழனிசாமி, வேல்முருகன், மல்லன், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் அருண்மொழிதேவன், பாசறை நிர்வாகிகளை நியமித்து பேசுகையில், 'ஜெ., அறிவித்த திட்டங்களை மெருகேற்றி முதல்வர் செயல்படுத்துகிறார். தி.மு.க., ஆட்சியில் நிலவிய மின்வெட்டு பிரச்னையை அ.தி.மு.க., தான் சரிசெய்தது.நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதாக கூறும் தி.மு.க.,வினர் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவார்களா' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X