சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.5 லட்சம் நகை, பணம் திருட்டு பண்ருட்டி அருகே துணிகரம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

பண்ருட்டி; பண்ருட்டி அருகே வீட்டை திறந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த மாளிகைமேடு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேசிங்கு, 55. இவர், நேற்று முன்தினம் காலை 6:30 மணியளவில் வீட்டை பூட்டிக்கொண்டு தனது மனைவி பச்சையம்மாள், மகன் மணிகண்டன் ஆகியோருடன் மூல்லை அரும்பு வயலுக்கு சென்றிருந்தார்.காலை 8:30 மணிக்கு தேசிங்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம், 15 சவரன் நகைகள், 21 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்தது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.இது குறித்த தேசிங்கு அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார். முதற்கட்ட விசாரணையில், வீட்டு கதவின் அருகே வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X