சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை மிரட்டிய வாலிபருக்கு வலை

Added : செப் 14, 2020
Share
Advertisement

பெண்ணாடம்; பெண்ணாடம் அருகே திருமணமான இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெண்ணாடம் அடுத்த எடையூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்; சென்னையில் வெல்டிங் வேலை செய்கிறார். இவரது மனைவி சித்ரா, 24, தனது குழந்தைகள் மற்றும் மாமனாருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த காமராஜர் தெரு விஜயகாந்த், 29, என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில் சித்ராவின் வீட்டிற்குள் புகுந்தார். சத்தம் கேட்டு சித்ரா கூச்சலிட, விஜயகாந்த் தப்பியோடி விட்டார். இது குறித்து நேற்று காலை சித்ரா ்கேட்டபோது, அவரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து, விஜயகாந்தை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X