பொது செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 251 பேருக்கு தொற்று 4 பேர் பலி; 418 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 14, 2020
Share
Advertisement

கடலுார்; கடலுார் மாவட்டத்தில், மேலும் 251 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,262 ஆக அதிகரித்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,011 ஆகும். கர்ப்பிணி பெண் 1, நோய் அறிகுறியுடன் 102, தனிமைப்படுத்தப்பட்டோர் 7, டாக்டர் 2, செவிலியர் 2, பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 137 என, மொத்தம் 251 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 16,262 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று, 418 பேர் சி்கிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 13,135 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 1,43,215 பேருக்கு பரிசோதனை செய்ததில், 16,262 பேருக்கு தொற்று உறுதியானது. 1,23,150 பேருக்கு தொற்று இல்லை. 3,803, பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 305 பேர், மற்ற மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

நால்வர் பலி

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எண்ணிக்கை 163 ஆகும். கடலுாரைச் சேர்ந்த 80 வயது முதியவர், பண்ருட்டி 75 வயது முதியவர் ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையிலும், கடலுார் 62 வயது முதியவர், குறிஞ்சிப்பாடி 60 வயது மூதாட்டி ஆகியோர் சென்னை தனியார் மருத்துவமனையிலும் நேற்று இறந்தனர். இதையடுத்து இறந்தவர்கள் எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X