புகை கக்கிச் செல்லும் அரசு பஸ்கள்

Added : செப் 14, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் கிராம பகுதிகளுக்குச் செல்லும் அரசு டவுன் பஸ்களில் பெரும்பாலானவைகள் புகை கக்கிச் செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது பஸ்கள் இயக்கப்படுகின்றன. உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 100க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான டவுன் பஸ்கள் குறைபாடுகளுடன் இயக்கப்படுகின்றன.நேற்று, கள்ளக்குறிச்சியிலிருந்து தாவடிப்பட்டு செல்லும் அரசு டவுன் பஸ், கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் போல புகையை கக்கியபடி சென்றது.இதனால், அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.மற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் டவுன் பஸ்களின் நிலைமையும் இதே போன்று இருப்பதாக புகார் எழுந்துள்ளது.கடந்த 5 மாதங்களாக இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களில் உள்ள குறைகளை பழுது நீக்கியிருக்கலாம். ஆனால், அதிகாரிகளின் மெத்தனத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X