குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேக்கம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

ரிஷிவந்தியம்; அத்தியூர் ஓடைத்தெருவுக்கு செல்லும் வழியில் தேங்கி நிற்கும் தண்ணீரினை அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. மழைக்காலங்களில் ஏரி நிரம்பினால், உபரி நீர் வெளியேறி ஓடைக்கு செல்லும் வகையில் வழித்தடம் உள்ளது. ஆனால், உபரி நீர் வெளியேறும் இடம் முறையான பராமரிப்பில்லாததால், செடி கொடிகள் வளர்ந்தும், மண்துார்ந்தும் காணப்படுகிறது.இதனால் கடந்த சில தினங்களாக பெய்த சிறிதளவு மழைக்கே ஓடைத்தெருவிற்கு செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் அப்பகுதில் வசிப்பவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அங்குள்ள மசூதிக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தி, மழைநீர் ஓடைக்கு செல்லும் வகையில், அந்த இடத்தை சரிசெய்திட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X