பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., இலவச ரத்த தான முகாம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார்; விழுப்புரம் மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, தேவனூர் திருமால் திருமண மண்டபத்தில் இலவச ரத்ததான முகாம் நடந்தது. மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கலிவரதன், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் திருமால் முன்னிலை வகித்தனர்.முகையூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுகுமாரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்திருந்த ரத்தம் பெரும் குழுவினருடன் இணைந்து ரத்ததானம் பெற்றனர்.மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் ஹரிகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், பரமேஸ்வரி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் திருஞானசம்பந்தம், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மஞ்சுநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுபாஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஸ்ரீரங்கன், திருக்கோவிலூர் ஒன்றிய பொருளாளர் பத்ரி, ஒன்றிய மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண் டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X