பொது செய்தி

தமிழ்நாடு

இறந்த போலீஸ்காரர் குடும்பத்திற்கு ரூ.16 லட்சம் குடும்ப நல நிதி வழங்கல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் இறந்த போலீஸ்காரர் முருகனின் குடும்பத்திற்கு 2002ல் பணியில் சேர்ந்த போலீசார் ரூபாய் 16 லட்சம் குடும்ப நல நிதி வழங்கினர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.மலையனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் 43. இவர் கடந்த 2002-ல் போலீஸ் பணியில் சேர்ந்து சென்னையில் பணியாற்றி வந்தார். கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி உடல் நலக் குறைவால் இறந்தார். இதனை அறிந்த 2002ல் போலீஸ் பணியில் சேர்ந்த போலீசார் 3, 500 பேரில் 3 ஆயிரம் போலீசார் சேர்ந்து குடும்ப நல நிதியாக ரூபாய் 16 லட்சம் சேர்த்தனர். இத்தொகையினை முருகனின் குடும்பத்தாருக்கு நேற்று வழங்கினர். அதற்கு முன்னதாக போலீசார் முருகன் புதைக்கப்பட்ட சுடுகாடு இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X