கள்ளக்குறிச்சியில் பி.ஆர்.எஸ்., நகரில்

Added : செப் 14, 2020
Share
Advertisement
 கள்ளக்குறிச்சியில் பி.ஆர்.எஸ்., நகரில்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் 21வது வார்டு பி.ஆர்.எஸ்., நகர் பகுதியில் மினி டேங்க் மோட்டார் பழுதடைந்து பல மாதங்களாகியும் நகராட்சியினர் சரி செய்யாததால் பொதுமக்கள் குடி தண்ணீருக்காக அவதியடைகின்றனர்.

கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலை அடுத்த பி.ஆர்.எஸ்., நகர் பகுதியில் பொதுமக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மின் இணைப்புடன் மோட்டார் பொருத்தி போர்வெல் மூலம் மினிடேங்கில் தண்ணீர் ஏற்றப்பட்டு வந்தது. இது அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக தீர்த்து வந்தது. இந்நிலையில் போர்வெல் மினி டேங்க் மோட்டார் பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்கப்படாமல் விடப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடிக்க வழியின்றி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே நகராட்சி அதிகாரிகள் பழுதடைந்து பயனற்று கிடக்கும் போர்வெல்லை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X