சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு மளிகை கடைக்காரர் பலி

Added : செப் 14, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூரில் கொரோனாவிற்கு மளிகை கடைக் காரர் பரிதாபமாக இறந்தார்.சங்கராபுரம் வட்டம் காட்டு வனஞ்சூரில் கள்ளக்குறிச்சி சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தவர் நாராயணன் மகன் ரங்கராதன் 65. இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடர் இருமல், சளி, ஜூரம் காரணமாக பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டு பின்னர் புதுசசேரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். கடந்த வாரம் காட்டு வனஞ்சூரில் பள்ளி ஆசிரியை கொரோனாவால் இறந்தது குறிப்பிடதக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X