பொது செய்தி

தமிழ்நாடு

சம்பா சாகுபடிக்கு மானியத்தில் நெல் ரகங்கள் வழங்கல்

Added : செப் 14, 2020
Share
Advertisement

சின்னசேலம்; சின்னசேலம் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமாக நெல், உளுந்து, மணிலா போன்ற பயிர்கள் மானிய விலையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சின்னசேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இங்குள்ள விவசாயிகள் முன்கூட்டியே சம்பா சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகளை துவங்கி உள்ளனர். இதனால் நிலங்களில் இயற்கை உரங்களான கால்நடை கழிவுகள் மற்றும் செம்மறி ஆடுகளை கிடை கட்டி, நிலங்களை சீரமைத்து வருகின்றனர்.இது குறித்து, வேளாண்துறை உதவி இயக்குனர் அன்பழகன் கூறியதாவது: குறுவை சாகுபடியில், குறுகிய கால நெல் ரகங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் வாயிலாக, 110 நாட்களில் பயிர் அறுவடை நடக்கும். ஆனால் சம்பா சாகுபடிக்கு, நீண்ட கால நெல் ரகங்களை சாகுபடி செய்வது நல்லது. இந்த பயிர்கள், 140 நாட்கள் வரை வளரும்.மேலும், தற்போது சம்பா சாகுபடிக்கு தேவையான பி.பி.டி (5204), திருச்சி 3, சொர்ணா சப்-1 போன்ற நெல் ரகங்களும், கே9, தரணி போன்ற மணிலா ரகங் களும் விவசாயிகளுக்கு மானிய விலையில் விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X