சின்னசேலம்; சின்னசேலம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் 433 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, 10 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., ஜியாவுல் ஹக் உத்தரவின் பேரில் தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையம், கூகையூர் ரோடு, மூங்கில்பாடி ரோடு, மரவாநத்தம் ரோடு, காந்தி நகர் பிரிவு ஆகிய ஐந்து இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அதில் லைசென்ஸ், ஆர்.சி., புக், இன்ஸ்சூரன்ஸ் இல்லாமல் பயணித்தவர்கள் மற்றும் முகக் கவசம், ெஹல்மெட், குடிபோதையில் வாகனம் ஓட்டியது என 433 பேர் மீது இ--சலான் மிஷின் மூலம் அபராதம் விதித்து, ரசீது வழங்கப்பட்டது. தொடர்ந்து தகுந்த ஆவணங்கள் இல்லாத 10 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE