சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.65 ஆயிரம் அபராதம்

Updated : செப் 14, 2020 | Added : செப் 14, 2020
Share
Advertisement
 மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.65 ஆயிரம் அபராதம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடமிருந்து நகராட்சி சார்பில் ரூ.65 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது

.கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மாதம் முதலே கலெக்டர் உத்தரவுப்படி நகராட்சி அதிகாரிகள் சாலைகளில் மாஸ்க் அணியாமல் செல்பவர்கள், சமூக இடைவெளி இல்லாமல் செல்பவர்களுக்கு ஸ்பாட் பைன் ரூ.200 விதித்து வந்தனர். கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் பாரதி ஆகியோர் வழிகாட்டுதல்படி, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார் முன்னிலையில், முகக்கவசம் அணியாமல் செல்பவர்களிடம் இருந்து நகராட்சி வருவாய் உதவியாளர்கள் ராஜி, முருகன், கில்டாரோஷின், செழியன், விஜயலட்சுமி ஆகியோர் ரூ.200 அபராதம் வசூலித்து, அதற் கான ரசீதியை வழங்கினர்.அதன்படி நேற்று வரையிலான அபராதமாக 325 பேரிடம் ரூ.65 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி பகுதியில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தும் விதமாக அபராதம் விதிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X