கள்ளக்குறிச்சியில் இரு சக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

Added : செப் 14, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் தாறுமாறாக சாலையோரங்களில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

கள்ளக்குறிச்சி நகர பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. கச்சேரி சாலையில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், வங்கிகள், தாலுகா அலுவலகம், நீதிமன்றங்கள் உள்ளன. இதனால் எந்த நேரத்திலும் கச்சேரி சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்துகள் மிகுதியாக காணப்படும்.கள்ளக்குறிச்சியின் பிரதான சாலைகளில் நாள்தோறும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றது. கடைகள், வங்கிகள், துணி கடைகள் போன்ற அனைத்திற்கும் வரும் வாகனங்கள் முக்கிய சாலையோரங்களில் தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். பல மணி நேரம் கழித்து வந்து வாகனங்களை எடுப்பதற்குள் ஒருவர் பின் ஒருவராக வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.இதனால் சாலையின் அகலம் முற்றிலும் குறைந்து, கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அனைத்து சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஒழுங்குபடுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X