சென்னை: தி.மு.க.,வில், துரைமுருகன் பொதுச் செயலராகவும், டி.ஆர்.பாலு பொருளாளராகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். ஆ.ராஜா மற்றும் பொன்முடி ஆகியோருக்கும், பதவிகள் வழங்கப்பட்டன. இது, தி.மு.க.,, சீனியர்கள் சிலரை, வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக, ஒரு சீனியர் பிரமுகர், மிகவும் நொந்து போயுள்ளார். 'நான் மிகவும் சீனியர். யாரை கட்சியில் நான் சேர்த்துவிட்டேனோ, அவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த நபருக்கு, திருச்சியிலிருந்து டிக்கெட் எடுத்து வரவழைத்ததே நான் தான். ஆனால், அவர் இப்போது பெரிய ஆளாகிவிட்டார். என்னை ஒதுக்கிவிட்டனர்' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.

அந்த எம்.பி.,யின் மனநிலையை அறிந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரிடம் போனில் பேசி ஆறுதல் சொல்லியிருக்கிறார். 'பலமுறை எம்.பி.,யாக இருந்தவர், அந்த பிரமுகர். இனிமேல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும்' என்கின்றனர், தி.மு.க.,வினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE