பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., அலுவலக பூங்கா சீரமைப்பு

Added : செப் 14, 2020
Share
Advertisement

கண்டமங்கலம்; கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக பூங்கா சீரமைப்பு பணி நடந்தது.விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தில் 1.73 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அழகிய பூங்கா உள்ளது. கடந்த ஓராண்டாகவே போதிய பராமரிப்பு இல்லாமல் பூங்காவில் அழகுக்காக வளர்க்கப்பட்ட மரங்கள் அழிந்தது. கடந்த சில மாதங்களில் பெய்த கனமழையால் கருகியிருந்த செடிகள் புத்துயிர்பெற்றது.இதையடுத்து பி.டி.ஓ.,க்கள் பிரபாகரன், நடராஜன் ஆகியோர் உத்தரவின்பேரில் பூங்காவை இயற்கை அழகுடன் பராமரிக்கும் பணி துவங்கியுள்ளது.இதையடுத்து மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராமப்புற தொழிலாளர்களைக்கொண்டு பூங்கா சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X