மூடாத பாதாள சாக்கடை:

Added : செப் 14, 2020
Share
Advertisement
 மூடாத பாதாள சாக்கடை:

விழுப்புரம்; விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு தாலுகா காவல் நிலையம் அருகே பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' திறந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, கடலுார், புதுச்சேரி மார்க்கமாக செல்லும் வாகன போக்குவரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலையில் அதிகளவு பஸ்கள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும்பாலானோர் சாலையோரங்களில் அதிகளவில் பயணிக்கின்றனர்.தாலுகா போலீஸ் நிலையம் அருகே பாதாள சாக்கடை 'மேன்ேஹால்' பல நாட்களாக திறந்த நிலையில் உள்ளது. இப்பகுதியை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.இரவு நேரங்களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகி காயமடையும் நிலை உள்ளது. இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்து விபத்துக்குள்ளானால் உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பெரும் விபத்து நடைபெறும் முன், அதிகாரிகள் உடனடியாக, பாதாள சாக்கடை 'மேன்ேஹாலை' மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X