ஈஸ்வரன் கோவில் மாட வீதியில்குவிந்துள்ள குப்பைகளால் துர்நாற்றம்

Added : செப் 14, 2020
Share
Advertisement

திண்டிவனம்; திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் மாட வீதியில் மலை போல் குவிந்துள்ள குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது.

திண்டிவனம் நகரப் பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் தினந்தோறும் அப்புறப்படுத்தி வருகின்றனர். இதை மீறியும் பல்வேறு இடங்களில் குப்பைகள் கொட்டுவது தொடர் கதையாகி வருகிறது.திண்டிவனம் முக்கிய இடங்களில் குப்பைகள் கொட்ட நகராட்சி தடை விதித்துள்ளது. ஈஸ்வரன் கோவில் மாட வீதியில், கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்கள் கொட்டியுள்ள குப்பைகள், மலைபோல் குவிந்து கிடக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமின்றி, வீணான பழங்கள், காய்கறிகளும், அப்பகுதியில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பயங்கர தூர்நாற்றம் வீசுகிறது.தற்போது, பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதால், இப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொது மக்களின் நலன் கருதி, அப்பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X